#kamalhaasanspeechspeech #kamallatestlatestspeech #indian2trailerlaunch #indian2pressmeet  #kamalhaasanspeechspeech #kamallatestlatestspeech #indian2trailerlaunch

உலக நாயகன் கமல் ஹாசன், சித்தார்த், ரகுல் பிரீத் சிங் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் அடுத்த மாதம் திட்டமிடப்பட்டுள்ளது.


 இந்த படத்தின் இசை வெளியீடு இம்மாதம் துவக்கத்தில் நடந்த நிலையில், டீசரும் படத்திற்கான எதிர்பார்ப்பை மிகப்பெரிய அளவில் உயர்த்தியது. 29 ஆண்டுகள் கழித்து, மீண்டும் ஷங்கர் மற்றும் கமல் ஹாசன் கூட்டணி இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 என இரு பாகங்களாக ரசிகர்களை கவர்ந்து வைக்க தயாராக இருக்கிறது.


இந்தியன் 2 ட்ரெயிலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கமல் ஹாசன் பல கெட்டப்புகளில் நடித்து ரசிகர்களை வியக்க வைத்துள்ளார்.  அடேங்கப்பா !!!!  இத்தனை கெட்டப்பா இந்த வயசுல பிரிச்சி மேய்ஞ்சிருக்காரே என்று ரசிகர்கள் கூறுகின்றனர். ஒரு சூப்பர் ஸ்டார் அப்படி செய்வாரா என்பதில் கமல் அவர்களின் கடின உழைப்பு மிகத் தெளிவாகக் காட்டியுள்ளது.


கமல் ஹாசன், விக்ரம் படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து, இந்தியன் 2 படத்தின் வேலைகளை துவங்கியதை குறிப்பிட்டார். கடந்த 2018 ஆம் ஆண்டில் துவங்கிய இந்த படத்தின் ஷூட்டிங், பல்வேறு தடைகளால் நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால் 29 ஆண்டுகளுக்குப் பிறகு, ஷங்கர் மற்றும் கமல் ஹாசன் மீண்டும் இணைந்து இப்படத்தை முழுமையாகக் கொண்டு வந்துள்ளனர்.


அதுபோல, அனிருத் அவர்களின் இசை இப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கியமானதாக இருக்கும் என்று கமல் கூறினார். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இப்படத்தின் ஷூட்டிங் நடந்ததை நினைவுபடுத்தினார்.


இந்தியன் 2 படத்தின் ட்ரெயிலரில், கமல் ஹாசன் காந்திய வழியில் நீங்கள், நேதாஜி வழியில் நான். மற்றும் இது இரண்டாவது சுதந்திர போர். போன்ற வசனங்கள் மூலம் படத்தின் அடிப்படை கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதனால் படம் மேலும் வலிமையுடன் வெளிப்படும் என்பதில் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.


கமல் ஹாசன், தன்னுடைய கேரக்டருக்காக தினந்தோறும் 6 மணி நேரம் மேக்கப்பிற்கு செலவிட்டுள்ளார். இந்த உழைப்பு, படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.


இந்தியன் 3 படம்;

இந்தியன் 2 படத்தின் தொடர்ச்சியாக, இந்தியன் 3 படத்தின் ஒட்டுமொத்த ஷூட்டிங்கும் முடிவடைந்துள்ளது. இது ஜனவரியில் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்த படத்தில், காஜல் அகர்வாலுடன் பல பிளாஷ்பேக் காட்சிகள் இடம்பெற உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


இந்தியன் 2 படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழாவில், படத்தின் முக்கிய அம்சங்களை கமல் ஹாசன் மற்றும் ஷங்கர் வெளிப்படுத்தியதால், ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகம் ஏற்பட்டுள்ளது.